திருச்சி மேல சிந்தாமணி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருச்சி மாநகரில் காவிரி தென்கரையில் அமர்ந்து தன்னை வேண்டிவரும் பக்தர்களுக்கு அளவிலா அருளை வாரி வழங்கும் காளியம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கடந்த 17 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் மற்றும் ஆன்மீக மெய் அன்பர்கள் அளித்த நன்கொடையினை பெற்று திருக்கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் சிறப்புற முடிவுற்று கடந்த 4-ந்தேதி காவிரி ஆற்றில் அய்யாளம்மன் கோவில் படித்துறையில் இருந்து தீர்த்தக்குடம் புறப்பட்டு கோவிலுக்கு வந்தடைந்து.
பின்னர் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
தொடர்ந்து நேற்றைய தினம் காலை நான்காம் யாகசாலை பூஜைகள் தொடங்கி பூர்ணஹுதி நிறைவுற்று.
தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்கள் (கடம்) ஊர்வலமாக வந்து பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க காலை 11.20 மணிக்கு கோவிலை சுற்றி கருடன் மேல வட்டமிட ஸ்ரீகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரக் கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
அங்கு திரண்டு இருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ஓம் சக்தி – பராசக்தி” என பக்தி முழக்கமிட்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு தீபாரானை காட்டப்பட்டு,
அங்கு இருந்த பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு மகா அன்னதானமும் நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் மேல சிந்தாமணி பகுதி முன்னாள் கவுன்சிலர் வழக்கறிஞர் ஜெ.செந்தில்நாதன், ஜெ.சிவக்குமார், ரியல் எஸ்டேட்
அதிபர் டி.கே.எஸ்.
விஜயகுமார் உட்பட உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள்,
ஊர் பொதுமக்கள் பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.