

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக சமூக பணித்துறை , துவாக்குடி அரசு கலை கல்லூரி சமூகப்பணி துறை மற்றும் சன்ரைஸ் பவுண்டேஷன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் திருச்சி வாசன் கண் மருத்துவமனை தலைமையில் கலைமகள் உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சன்ரைஸ் பவுண்டேஷன் மனநல ஆலோசகர் ரோகித் குமார்,வாசன் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர்
சுந்தர்ராஜன் கலைமகள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை ஏஞ்சலின் ஜெயா, கலைமகள் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை தனலெட்சுமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும் செவிலியர்களுக்கும் மரக்கன்று நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை சன்ரைஸ் பவுண்டேஷன் மனநல ஆலோசகர் ரோகித் குமார் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சமூகப்பணி துறையின் கௌரவ விரிவுரையாளர் பிரியா , இரண்டாம் ஆண்டு மாணவி சௌமியா, துவாக்குடி அரசு கலை கல்லூரி சமூகப்பணி துறை இரண்டாம் ஆண்டு மாணவன் பார்த்திபன் ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
முகாமில் கலைமகள் உயர்நிலைப்பள்ளி, கலைமகள் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள்,
பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் மற்றும் மற்ற கல்லூரி மாணவிகள் என 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

