திருச்சி பொன்மலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.


திருச்சி பொன்மலையில் பல்வேறு
கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ.வினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், உற்பத்தி பணிமனைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும்,
ஹைஸ்பீடு லோகோக்களை தயாரிக்க தனியாருக்கு டெண்டர் விட முயற்சிப்பதை கண்டித்தும்
திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் ரயில்வே பணிமனை முன்பு இன்று எஸ்.
ஆர்.எம். யூ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு எஸ். ஆர்.எம்.யூ. மாநில துணை பொதுச் செயலாளர் எஸ். வீரசேகரன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொன்மலை பணிமனை தொழிலாளர்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரளாகப் பங்கேற்றனர்.
பத்திரிகையாளர்களிடம் வீரசேகரன் கூறும்போது:
உற்பத்தி பணிமனைகளை தனியார் மயமாக்கும் திட்டத்தால் சிறப்பாக செயல்பட்டு வரும் பெரம்பூர் கேரேஜ், பெரம்பூர் லோகோ, பொன்மலை பராமரிப்பு பணிமனை ஆகியவையும் தனியாருக்கு விடப்படும் ஆபத்து உள்ளது.
ஆகவே மத்திய அரசின் தனியார் மயமாக்கல் கொள்கையை தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து மத்திய அரசு இதே நிலையை மேற்கொண்டால் விரைவில் ரயில் நிறுத்த போராட்டமும் அறிவிக்கப்படும் என கூறினார்.

