மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். திருச்சி மாவட்ட செயலாளர் குமார் அறிக்கை.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை தொடர்ந்து மின் கட்டணத்தையும் உயர்த்தி தமிழக மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை 16.09.2022 அன்று காலை 9:30 மணி அளவில் மேலக்கல்கண்டார் கோட்டை பெரியார் திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அதுசமயம் மாவட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை, வட்ட கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறன் என திருச்சி
அ இ அ தி மு க புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப..குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

