Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பிரைனோ பிரைன் கிட்ஸ் அகாடமி சார்பில் அபாகஸ் போட்டி நடைபெற்றது

0

'- Advertisement -

 

திருச்சி: பிரைனோ பிரைன் கிட்ஸ் அகாடமி சார்பில் 138வது அபாகஸ் போட்டி திருவிழா திருச்சியில் நடைபெற்றது.

“பிரைனோபிரைன்ஃபெஸ்ட் 2022” என்ற இந்த திருச்சி மண்டல அளவிலான போட்டி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் இன்று நடைபெற்றது இதில் திருச்சி தஞ்சை திருவாரூர் நாகை புதுக்கோட்டை கரூர் பெரம்பலூர் அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு முதல் 14 வயது வரையிலான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் மொத்தம் 1100 மாணவர்கள் கலந்து கொண்டனர் இதில் நானும் பிரிவுகளாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டது.

இப்போட்டியில் சிறப்பு விருந்தினராக பிரைனோ பிரைன் இன்டர்நேஷனல் பயிற்சியாளர் அருள் சுப்பிரமணியன் கலந்து கொண்டார் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

தலைமை பயிர்சியாளர் பிரியா சிவலிங்கம் போட்டிகளை முன்னின்று நடத்தினார்.

கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நேரடி போட்டிகள் நடத்தப்படவில்லை. ஆன்லைன் மூலமே போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சாம்பியன்ஷிப், தங்கம், வெள்ளி, மற்றும் சாதனையாளர் பரிசுகள் வழங்கப்பட்டது. இது தவிர போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மாநில அளவில் 138வது முறையாக இந்த போட்டி நடத்தப்படுகிறது. திருச்சியில் 6வது முறையாக இந்த போட்டி நடைபெற்றுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.