Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

விஜயகாந்தின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள்.

0

'- Advertisement -

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கோவிலில் சிறப்பு அபிஷேகம், கட்சி கொடியேற்றி இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Suresh

திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் 70வது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே.எஸ்.குமார் ஆலோசனைப்படி
மாவட்ட முன்னாள் அவைத் தலைவர் ராஜலிங்கம் தலைமையில் கட்சி கொடியை ஏற்றி இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் முசிறி நகர செயலாளரும் நகர்மன்ற உறுப்பினருமான சுந்தர்ராஜன்,
மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெயராமன், கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ்குமார்,
செல்வராஜ், வடக்கு மாவட்டம் மாணவரணி துணை அமைப்பாளர் மோகன்ராஜ், பாலன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கதிர்வேல், மாவட்ட பிரதிநிதிகள் ராஜேந்திரன், சண்முகம், துணைச் செயலாளர் பன்னீர்செல்வம், பிரபு நகர இளைஞரணி செயலாளர், அமுதாரவி மகளிர் அணி முசிறி நகர நிர்வாகிகள் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.