Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தண்ணீர் அமைப்பு சார்பில் ‘ஆடி பட்டம் தேடி விதை. நாடி வருகிறது வீட்டிற்கு.விதை’.

0

 

தண்ணீர் அமைப்பின் சார்பில்,

” *ஆடிபட்டம் தேடிவிதை, நாடி வருகிறது வீட்டிற்கு விதை* ”

எனும் செயல் திட்டத்தின் அடிப்படையில் விதைகள் வழங்கும் முதல் நிகழ்ச்சியாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் விதைகள் வழங்கப்பட்டது.

ஆடி பட்டம் தேடி விதைப்போம்!

தண்ணீர் அமைப்பு சார்பாக 2017 முதல் “ஆடி பட்டம் தேடி விதை, நாடி வருகிறது வீட்டிற்கு விதை ” என்ற செயல் திட்டம் முலம் வீட்டிற்கு தேவையான கீரை, வெண்டை , கத்தரிக்காய் , போன்ற விதைகள் கொடுக்கப்பட்டது.

2022 இந்த ஆண்டு வீட்டிற்கு பயன் தரும் விதைகளுடன், புங்கை, பனை விதைகள் வழங்கப்படுகிறது.

இதன் தொடக்கமாக திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பீரதீப்குமார், அவரிடம் தண்ணீர் அமைப்பு சார்பாக கத்தரி ,தக்காளி, மிளகாய், சிறுகீரை, பருப்பு கீரை, புடலை, உள்பட 50 வகையான விதைகளை கொண்ட பாக்கெட் கொடுக்கப்பட்டது.

இதில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் தண்ணீர் கே.சி. நீலமேகம், செயலாளர் பேராசிரியர் கி.சதீஷ்குமார், நிர்வாகக் குழு ஆர்.கே.ராஜா , மற்றும் இதற்கு விதைகள் கொடுத்து உதவிய முசிறி விதைகள் யோகநாதன் கலந்துக் கொண்டார்கள் .

ஆடி மாதத்தில் விதை விதைத்து விவசாயம் செய்தால், தை மாதத்தில் அறுவடை செய்யலாம். பயிர்களுக்கு தேவையான சூரிய ஒளியும், பிராண வாயுவும், நல்ல மழையும் கிடைத்து, விவசாயிகளுக்கு சிறப்பான அறுவடையைக் கொடுக்கும். கடுமையான கோடைக்காலங்களைச் சந்தித்த மண், இறுகி கடினமாக மாறியிருக்கும். ஆனி மழையில் இறுக்கங்கள் தளர்ந்து இதமாக இளக தொடங்கும்.

மண்ணின் ஈரப்பதத்தில் நுண்ணுயிர்கள், மண் புழு, நல்ல பாக்டீரியாக்கள் உருவாக தொடங்கும். மழைக் காலங்களில் முளைத்திருக்கும் சிறிய செடிகளை மேய்க்கும் ஆநிரையின் கழிவுகள், மண்ணுக்கு உரமாகி மண்ணுக்கு ஆற்றலைக் கொடுக்கும். பூமிக்கு வேண்டிய சூரியக் கதிர்களின் சக்தியும் மிகச் சரியாக கிடைக்கும்.

இதனால் மண் செழிப்பதோடு, விதைத்த பிறகு பயிர்களும் செழித்து அறுவடையை மகிழ்ச்சியாக்குகிறது. அற்புதமான விளைச்சலைத் தருவிக்கிறது என்பதை உணர்ந்து தான், முன்னோர்கள் ஆடி பட்டம் தேடி விதை என்னும் பழமொழியை உண்டாக்கினார்கள்.

விதைகள் இருப்பு உள்ளவரை வழங்கப்படும் என நீலமேகம் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.