Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அமைச்சர்கள் எங்களை சந்திக்க நேரமும் அனுமதியும் வழங்குவதில்லை.பைனான்ஸ் &சிட்பண்ட்ஸ் சங்க மாநிலத் தலைவர் பேட்டி.

0

 

நிதி நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டியை முழுவதுமாக நீக்க வேண்டும் – பைனான்ஸ் அண்ட் சிட்பண்ட்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை.

பைனான்சியர்ஸ் சிட்பண்ட்ஸ் அசோசியேசன் வெள்ளி விழா ஆண்டு நிகழ்ச்சி திருச்சி சென்னை பைபாஸ் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அகில இந்திய சிட்ஃபண்ட்ஸ் சங்கத்தின் தலைவர் சிவராமகிருஷ்ணன் தமிழ்நாடு சிட் பண்ட்ஸ் கம்பெனிஸ் சங்கத்தின் மாநில தலைவர் கிருஷ்ணபாரதி, சிட் பண்ட்ஸ் சங்கத்தின் மாநில தலைவர் சிற்றரசு உட்பட மாநிலத்தில் பல்வேறு பகுதியிலிருந்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தினர் பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு பைனான்ஸ் அண்ட் சிட்பண்ட்ஸ் சங்கத்தின் மாநில தலைவர் கிருஷ்ணபாரதி கூறிய போது:-

ஜிஎஸ்டி என்பது பொருட்கள் சேவை வரி. இது வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய வரியாகும். உலகம் முழுவதும் எந்த ஒரு நிதி சார்ந்த தொழில்களுக்கும் ஜிஎஸ்டி கிடையாது.

200 நாடுகளில் இன்று ஜிஎஸ்டி உள்ளது ஆனால் நிதி சார்ந்த தொழில்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது. இந்தியாவில் வங்கிகள், தொழில் சார்ந்த நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் உட்பட பல்வேறு நிதி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது. ஆனால் சிட்பண்ட்ஸ் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அங்கீகரித்துள்ளது.

ஆனால் சிட் பண்ட்ஸ் நிறுவனங்களுக்கு மட்டும் 18% சதவீதம் ஜிஎஸ்டி உள்ளது. இதனை பொதுமக்கள் தான் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. அகில இந்திய அளவில் சுமார்
70ஆயிரம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவி செய்கிறோம்.

இன்று வங்கிகளுடைய கணக்கீடு எடுத்தால் மிகப்பெரிய வங்கியின் கணக்கீட்டில் நான்காவது இடத்தில் நிதி பண பரிவர்த்தனையில் நாங்கள் இருக்கிறோம்.
அரசு முழுமையாக பரிசீலித்து எங்களுக்கு தனியாக விதிவிலக்கு கேட்கவில்லை மற்ற நிதி நிறுவனங்களுக்கு இல்லாத பாரத்தை எங்களுக்கு கொடுக்க வேண்டாம் என்பது எங்களது கோரிக்கை.

இது தொடர்பாக மத்திய, மாநில அரசு அமைச்சர்களுக்கு கோரிக்கை கொடுத்துள்ளோம் ஆனால் நேரடியாக கோரிக்கை மனுக்கள் பெறுவதும் இல்லை, அமைச்சர்கள் எங்கள் நேரடியாக பார்ப்பதற்கு அனுமதியும், நேரமும் வழங்குவதும் இல்லை எனத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.