Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாரதிதாசன் பல்கலைக்கழக வாணாள் வரை கற்றல் துறை சார்பில் சுதந்திர நாள் அமுத திருவிழா.

0

 

வாணாள் வரைக்கற்றல் துறை சார்பில்

75வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் பொருட்டு பாரதிதாசன்
பல்கலைக்கழக வாணாள் வரைக்கற்றல் துறையில் 15 நாட்கள் தொடர் நிகழ்வுகள்
ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

முதலாவது நிகழ்வாக மகாத்மா காந்தியின்
சுதந்திர போராட்ட பங்களிப்பு குறித்த வட்டமேசை மாநாடு வாணாள்
வரைக்கற்றல் துறை நூலகத்தில் நடைபெற்றது.

இரண்டாம் ஆண்டு மாணவி கௌத்தமி வழங்கிய அறிமுகத்துடன்
நிகழ்ச்சி தொடங்கியது.

அதைத் தொடர்ந்து மகாத்மா காந்தியைப் பற்றிய
பல்வேறு அம்சங்களில் தீவிர விவாதம் நடைபெற்றது. இது ஒரு பயனுள்ள
அமர்வாக அமைந்தது. இதில் மொத்தமாக
25
மாணவர்கள்
மற்றும்
பேராசிரியர்கள் கலந்து கொண்டு நிகழ்வை நடத்தினர்.

ஒவ்வொரு
மாணவர்களும் தீவிரமாக பங்கேற்று மகாத்மாவை
பற்றி பல்வேறு
கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

மாநாட்டின் போது சுதேசி
இயக்கம்,உப்பு சத்தியாகிரக அணிவகுப்பு, அகிம்சை இயக்கம் மற்றும்
இறுதியாக வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற இயக்கங்களிகன்
வரலாற்று பங்களிப்புகள் விவாதிக்கப்பட்டன.

காந்திஜியின் வாழ்க்கையை
மாற்றிய நிகழ்வுகள் மற்றும் அத்தகைய இயக்கங்களுக்கு வழிவகுத்த
குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் பற்றிய விவரங்களும் பகுப்பாய்வு
செய்யப்பட்டன. இந்தியாவின் சுதந்திரம் மற்றும் இந்தியாவின்
முன்னேற்றத்திற்கு மகாத்மாவின் பங்களிப்பு குறித்து விரிவான
விவாதத்திற்குப் பிறகு மகாத்மா காந்தி பற்றிய சிறு காணொளி
மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது,

பின்னர் வாணாள் வரை கற்றல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி ஷர்மிலி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களும் சுதந்திர தினத்தை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் 15 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி பற்றி எடுத்து கூறினார்.

பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின்படி வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி திருச்சி ஓலையூர் அரசு தொடக்கப் பள்ளியில் சுதந்திர இயக்கம் தொடர்பான ஓவியப்போட்டி: சுதந்திர போராட்ட வீரர்கள், இடங்கள், நிகழ்வுகள், போன்றவை.

எழுதுதல்:கட்டுரை,
கவிதை
நடனம்,நாடகம்,

கோல போட்டி:ரங்கோலி

சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த மாறுவேட போட்டி.

சுதந்திர நிகழ்வுகள் பற்றிய காணொளி காட்சிகள்,

தமிழகம் மற்றும் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் வீராங்கனைகள் புகைப்பட கண்காட்சி.

உள்ளூர் கொரோனா முண்கல பணியாளர்களை கௌரவித்தல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இந்நிகழ்ச்சிகளை துறை தலைவர் அன்பழகன்,உதவி பேராசிரியர்கள் குமுதவல்லி,
சத்தியன்,தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி,மற்றும் துறை மாணவர் மாணவிகள் சிறப்பாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இறுதியாக மாலை
முதலாம் ஆண்டு மாணவர் கிப்சன் ஆற்றிய நிறைவு உரையுடன் மாநாடு
நிறைவு பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.