Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மனிதநேய தொண்டர்களுக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டு விழா.

0

'- Advertisement -

 

மனித நேயம் தொண்டர்களுக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டு விழா.

உலக மனித நேயம் தினத்தை முன்னிட்டு மனித நேய பண்பாளர்களை மக்கள் சக்தி இயக்க சார்பில் பாராட்டு விழா மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் தலைமையில் , தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி.சதீஸ்குமார் , தண்ணீர் அமைப்பு நிர்வாகக் குழு ஆர்.கே.ராஜா ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

விழாவிற்கு திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் முனைவர் இரா.கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தி ராக கலந்துக் கொண்டு
மனித நேயத்திடன் தொண்டாற்றம் அன்பாலயம் செந்தில்குமார் , அமிர்தம் யோகா விஜயகுமார் ஆகியோர் பாராட்டி பேசினார்.

Suresh

மக்கள் நெருக்கடியால் பாதிக்கப்படும் போதெல்லாம், அவர்களுக்கு உதவி செய்பவர்கள் உள்ளனர். உலகெங்கிலும் உள்ள மனிதாபிமான நோக்கங்களை மதிக்கவும், மனித நலனை மேம்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 அன்று உலக மனிதாபிமான தினம் அனுசரிக்கப்படுகிறது.

மனிதாபிமான தொண்டுகளில் ஈடுபட்டு, அயராது உழைக்கும், பணிகளில் தங்கள் இன்னுயிரையும் துறக்கும் , ஆதரவற்றவர்களுக்கு மீட்டு, மருத்துவ உதவி வழங்க, உயிர் இழந்தவர்களை நல்லடக்கம் செய்ய, வீடு, உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து நிற்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட… என, சில நல்ல மனிதர்கள் தங்கள் உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் போராடுவார்கள். அந்த வகையில் திருச்சி குண்டூர் பகுதியில் அன்பாலயம் என்கின்ற
ஆதரவற்றவர்களுக்கான தொண்டு நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இதன் நிறுவனர் அன்பாலயம் செந்தில்குமார்,
இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, திருச்சி மாநகரத்தில் தென்படும் கைவிடப்பட்டவர்களையும் மன வளர்ச்சி குன்றியவர்களை மீட்டு அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை அங்கீகாரத்தையும், ஒத்துழைப்பையும்,வழங்கிவருகிறார்

அடுத்து யோகா ஆசிரியர் விஜயகுமார் ,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை 1995 ஆண்டுமுதல் நடத்தி வருகிறோர் அறக்கட்டளை சார்பாக ஆராயிரம் நூல்கள் வைத்து இலவச நூலகம் அமைத்துள்ளோர் சேவை என்றால் பொறுமை சகிப்புத்தன்மை பொருளாதாரமும் இருக்க வேண்டும். ஊதியத்தில் ஒரு பங்கினை சேவைக்காகவே செலவிட்டு வருகிறோர் , மேலும் உற்றார் உறவினர் சுற்றத்தார் நண்பர்கள் இன்றி ஆதரவற்று சாலையோரம் இறப்பது துரதிருஷ்டமானது. இறப்பவர்கள் தகவல் அறிந்து காவலர்கள் வரும் வரை அனாதையாக சாலையிலேயே இருப்பார்க. முறைப்படி காவல் துறையினர்க்கு விசாரித்து, அரசு
மருத்துவமனைக்கு தகவல்
கொடுத்து நல்லடக்கம் செய்கிறார் . இவர்களை உலக மனித நேய தினத்தில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறான், மனித நேய சேவை மகத்தானது. அவர்களுக்கு நாமும் இந்த நாளில் நன்றி சொல்வோம்! என்றார்.

மனித நேய தொண்டர்களை கௌரவிக்கும் வகையில் அன்பாலயம் செந்தில்குமார் மற்றும் யோகா விஜயகுமார் இவருக்கும் பொன்னாடை போர்த்தி, டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய புத்தகம், நினைவு பரிசுகள் வழங்கியதுடன் , “வீட்டுக்கு ஒரு சிறு தோட்டம்” விதைபாக்கெட்கள், “பிளாஸ்டிக் தவிப்போம், துணிப்பையை எடுப்போம் ” என துணிப்பை கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க பண்பாளர்கள், தண்ணீர் நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.