சுதந்திர தின விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாற்றம் அமைப்பின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் போசம்பட்டி பஞ்சாயத்து கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கிடையே சுதந்திரம் மற்றும் சுற்றுச்சூழல் என்கிற தலைப்பில் கட்டுரைபோட்டி, பேச்சு போட்டி மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பரிசுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நமது தாய் திருநாடு சுதந்திரம் அடைந்தது 75 ஆண்டை சிறப்பிக்கும் வகையில் நாடு முழுவதும் குக்கிராமத்தில் தொடங்கி நகர மாநகர பகுதிகள் வரை ஜாதி மதம் மொழிகளை கடந்து அனைத்து தரப்பு மக்களும் ஒன்றினைந்து இந்த 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இதனையொட்டி கிராம பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுடைய திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் அரசு பள்ளி மாணவ மாணவிகள் மத்தியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் போசம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற உயர்நிலை ப்பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் (ஓவியப்போட்டி) மு. பிரேமலதா 10 ம் வகுப்பு,
கட்டுரை போட்டி எஸ். சந்தியா 9ம்வகுப்பு பெரியசாமி 9ம் வகுப்பு தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் கட்டுரை போட்டி இனியா 5ம் வகுப்பு ஹரிணி 5ம் வகுப்பு ஓவியபோட்டி தியாஸ்நாதன் 4ம் வகுப்பு யாஜ்னிகா 3ம் வகுப்பு நிதிகா 3ம் வகுப்பு பேச்சு போட்டி ஜெனித் 4ம் வகுப்பு ராகவி 4ம் வகுப்பை சேர்ந்த வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் கலை நிகழச்சிகள் மற்றும் பல போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் அமைப்பின் கொளரவ தலைவரும் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் எஸ். அண்ணாதுரை போட்டிகளில் வெற்றி பெற்ற உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்
அமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் இளையராஜா அமைப்பின் மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா மகளிர் பிரிவு இணைசெயலர் அல்லிகொடி ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற தொடக்கப்பள்ளி மாணவ மணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் அந்தநல்லூர் ஒன்றியம் போசம்பட்டி பஞ்சாயத்து அரசு உயர்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஓ.அழகர்சாமி உதவி தலைமை ஆசிரியர் ப. மீனாட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சி. கலைச்செல்வி உதவி தலைமை ஆசிரியர் சு. சாந்தி உதவி ஆசிரியர்கள் வி. தனலெஷ்மி எஸ். விஜயஹி ஏ. சமீம் டி. தேன்மொழி அனுஷ்மா நந்தினி மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ், திரளான மாணவ மாணவிகள் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.