மக்கள் சக்தி இயக்கம் சார்பில் செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா.
மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பாராட்டு விழா
திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்
பள்ளியில் விடுதலை திருநாள் நிகழ்ச்சியில் மக்கள் சக்தி இயக்க சார்பாக சென்ற கல்வி( 2021-22) ஆண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 மதிப்பெண்கள்
1.பு. சூர்ய பிரசாத்,
2 வே.சத்யா ,
3.கு.லெனின் விக்டர்,
பெற்றவர்களுக்கு முதல் பரிசு
பாராட்டுச் சான்றிதழ் உடன்
ரூ.1500/ ,
இரண்டாம் பரிசு ரூ.1000/,
மூன்றாம் பரிசு ரூ.750/.
மேலும் பாடங்களில் தமிழ், கணிதம், மற்றும் அறிவியல் பாடங்களில் முதல் மதிப்பெண் .பு. சூர்ய பிரசாத், வே. சத்யா , இரவிச்சந்திரன் ஆகியோருக்கு தலா ரூ.750/- இவற்றுடன் பாராட்டு சான்றிதழ், மக்கள் சக்தி இயக்க நிறுவனர் டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி அவர்கள் எழுதிய “எண்ணங்கள்” நூலும், உலகப்பொது
மறை “திருக்குறளும்” நூல்கள் வழங்கப்பட்டது.
இதில் மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர். இளங்கோ தலைமையில் ,
மாநில துணைத் தலைவர் வெ.இரா.சந்திரசேகர், நிர்வாகி ஆர்.கே.ராஜா முன்னிலையில் நடந்தது.
சிறப்பு விருத்தினராக
செந்தண்ணீர்புரம் பகுதி மாமன்ற உறுப்பினர் சுரேசு கலந்துக் கொண்டு மாணவ , மாணவிகளை பாராட்டி, மக்கள் சக்தி இயக்க கொடுத்த ஊக்கத்தொகை, சான்றிதழ் , நூல்களை வழங்கினார்.
மேலும் 20/06/22 அன்று செந்தண்ணீர்புரம் பகுதியில் இயங்கும் அரசு பேருந்து தடம் எண் 52 ல் பயணியர் தவறி விட்ட ஒரு லட்சத்து அறுபதாயிரம் மதிப்புள்ள (4 பவுன்) நகையை “நேர்மையுடன் ”
காந்தி சந்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த நடத்துனர்
அ.ஆறுமுகம் அவர்களுக்கும்
ரூ.500 பணமுடிப்புடன் பாராட்டு சான்றிதழ், மக்கள் சக்தி இயக்க நிறுவனர் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி எழுதிய
” எண்ணங்கள் ” நூலுடன், உலகப் பொதுமறை ” திருக்குறள் ” ஆகியவற்றை திருச்சி மாவட்ட செயலாளர் இரா .இளங்கோ
மாநில துணைத்தலைவர் வெ. இரா. சந்திரசேகர்,
மற்றும் ஆர்.கே.ராஜா வழங்கி , பாராட்டி சிறப்பு செய்யதார்கள்.
நிகழ்விற்கு செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்