திருச்சி உறையூர் சேஷா ஐயங்கார் நினைவு மேல்நிலைப்பள்ளியில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவூட்டும் வகையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது.
இந்த சிலம்ப விளையாட்டுப் போட்டியினை எஸ்எம்எஸ் பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்தார்.
மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் உண்ணா சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி,
மருத்துவர்கள் ராஜரத்தினம் மற்றும் கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
ஸ்ரீ செங்குளத்தான் குழந்தலாயி அம்மன் அ.குமரேசன் சிலம்பம் தற்காப்பு கலைக்கூட நிறுவனர் ஆசான் குமரேசன் இந்த மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியினை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.
மேலும் இந்த விளையாட்டுப் போட்டியினை கலைக்கூட இணை செயலாளர் லட்சுமிகாந்த்,ராம் ரச்சகன்,ஹரிகரன், புருஷோத்தமன், அருள் ஆகியோர் போட்டியினை சிறப்பாக ஒருங்கிணைத்து இருந்தனர்.