Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் நகையை பறி கொடுத்த பெண்ணின் புகாரை வாங்க மறுப்பு.காவல்துறை ஆணையரிடம் இன்று மனு அளிக்க உள்ளார்.

0

'- Advertisement -

 

திருச்சி பாலக்கரை பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் நேற்று காலை 9.30 மணியாளவில் கோவை சொல்ல தனது கைபையில் 4 1/2 பவுன் செயின்யுடன் பாலக்கரையில் இருந்து டவுன் பஸ் முலம் மத்திய பேருந்துநிலையம் வந்து இறங்கி கோவை செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்து டிக்கெட் எடுக்க தனது கைப்பையை பார்த்த போது அது 4 1/2 பவுன் நகையுடன் காணாமல் போனது தெரியவந்தது.

உடன் இதுகுறித்து தனது சகேதரருக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது இது மத்திய பேருந்து நிலையத்தில் நடந்து உள்ளது நீங்கள் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் என கூறிவிட்டனர்.

 

கண்டோன்மென்ட் கிரைம் போலீசார் பாலக்கரையில் பஸ் ஏறி உள்ளார் அதனால் நீங்கள் பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் என இரண்டு காவல் நிலையத்திலும் புகாரை வாங்க மறுத்துள்ளனர்.

இதனால் மன வேதனை அடைந்த நகையை இழந்த பெண்ணும் அவரது சகோதரரும் இன்று காலை 11 மணி அளவில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அவர்களை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.