Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திமுகவுக்கு சிம்மசொப்பனமாக விளங்ககூடிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக வேண்டும். திருச்சியில் மாணவரணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்.

0

 

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் யாகுவதற்கு ஆதரவு,
திமுக அரசுக்கு துணைபோகுபவர்களுக்கு கண்டனம்.
திருச்சியில் எடப்பாடி ஆதரவாளர்கள் தீர்மானம்.

அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம், மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே பிரச்சனை ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் அந்தந்த மாவட்டங்களில் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளை அழைத்து பேசி கூட்டம் நடத்தி ஆதரவு திரட்டி வருகின்றனர்.

திருச்சியில் மாநகர்,மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் பகுதி வாரியாக கடந்த இரண்டு நாட்களாக திருச்சி மாநகர், மாவட்ட மாணவரணி செயலாளர், ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது.

இன்று திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள அலுவலகத்தில் தில்லைநகர் பகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவை தலைவர் மலைக்கோட்டை ஐயப்பன் தலைமை தாங்கினார். தில்லைநகர் பகுதி செயலாளர் முஸ்தபா, முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி. பரமசிவம்,நிர்வாகிகள் வனிதா,ஜாக்குலின் பாலக்கரை சதர், மல்லிகா செல்வராஜ், வெல்லமண்டி சண்முகம், நாகநாதர் பாண்டி,சுரேஷ் குப்தா,தென்னூர் அப்பாஸ்,ஏர்போர்ட் விஜி, இலியாஸ், சகாபுதீன், அழகரசன் விஜய்,கலைவாணன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அதிமுக மாணவரணி செயலாளர் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் பேசிய போது:-

கூட்டத்தில் ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பை கனவாக்கும் விதமாக திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச்செயலாளர் ஆவதற்கு
தில்லைநகர் பகுதி ஏக மனதாக ஆதரிக்கிறது. மேலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தி திமுக அரசுக்கு துணை போகும் விஷ கிருமிகளையும், கருப்பு ஆடுகளையும் இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் செல்வகுமார்,
சீனிவாசன், கிதர் முகம்மது, கன்னியப்பன், கணேசன், ஜெகதீஸ்வரன், காமராஜ், ராஜகோபால், தில்லை முருகன், என்ஜினியர் ராஜா, குருமூர்த்தி, வசந்தம் செல்வமணி, எபுதூர் வசந்தகுமார், அக்பர் அலி,ஒத்தக்கடை மணிகண்டன்,
மகேந்திரன், சீனிவாசன்,அப்பா குட்டி, தேன்மொழி, தென்னூர் தினகரன்,புங்கனூர் கார்த்தி, சிந்தாமணி மகா,சதீஷ், இ.பி.மோகன், பி.கே.ஏழுமலை, கவுன்சிலர் அரவிந்தன், ராஜவேல், கீதாராமநாதன்,
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இதே தீர்மானத்தை ஆதரித்து கருமண்டபம் பகுதி வட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.