திருச்சி 25 வது வார்டில் கட்டுமான பணி முடிந்தும் திறக்கப்படாத பொதுக்கழிப்பிடம்.மாநகராட்சி கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்.
உய்யக்கொண்டான் திருமலையில் 25-வது வார்டில் கட்டுமான பணிகள் முடிந்தும் அரசியல் காரணத்திற்காக பல நாட்களாக மக்கள் பயன்பாட்டிற்கு வராத பொது கழிப்பிடத்தை திறக்கக்கோரி
பாஜக மண்டல் தலைவர் பரஞ்ஜோதி தலைமையில் மாவட்ட இளைஞரணி தலைவர் பரணி குமார் முன்னிலையில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சியை கண்டித்து பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வர்த்தகப் பிரிவு தீபக்,ஊடகப்பிரிவு சிவகுமார், வழக்கறிஞர் பிரிவு முத்துமாணிக்கம், மண்டல செயலாளர் ரவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.