காலியிடங்களை
பருவகால பணியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும் .
சி.ஐ.டி.யு. நுகர்பொருள் வாணிப கழக கூட்டத்தில் தீர்மானம்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொதுத்தொழிலாளர் சிஐடியு சங்க திருச்சி மண்டல பொதுக்குழு கூட்டம் வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது.
மண்டல தலைவர் வேலு தலைமை தாங்கினார். மண்டல துணைத்தலைவர்கள் வடிவேலன், சண்முகவேல். செயற்குழு உறுப்பினர் நாகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலை அறிக்கையை மண்டல செயலாளர் ராசப்பன் வாசித்தார். வரவு செலவு அறிக்கையை மண்டல பொருளாளர் கருணாகரன் சமர்ப்பித்தார். மாநில பொருளாளர் ஏழுமலை, சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
காலியிடங்கள்
கூட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தால் நடத்தப்படும் ரேசன் கடைகளை கூட்டுறவு துறைக்கு மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும்.
நுகர்பொருள் வாணிப கழகத்தில் கடந்த 2 வருடங்களாக நிரப்பபடாமல் உள்ள காலிப்பணியிடங்களை 12(3) ஒப்பந்தத்தின் படி பருவகால பணியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.
சுமைப்பணி தொழிலாளர்களை அவுட்சோர்சிங் முறையில் பணியமர்த்த தனியாரை ஊக்குவிக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
புதிதாக உருவாக்கப்பட உள்ள மண்டல அலுவலகங்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணிபுரியக்கூடிய மேலாளர்களை பணியமர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில பொதுச்செயலாளர் புவனேஸ்வரன் நிறைவுரையாற்றினார்.
கூட்டத்தில் மண்டல துணைசெயலாளர் கே.அய்யப்பன், செயற்குழு உறுப்பினர் ஆனந்த், மண்டல துணைத்தலைவர் எம்.அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக செயற்குழு உறுப்பினர் சின்னையன் வரவேற்றார். முடிவில் செயற்குழு உறுப்பினர் துரைமுருகன் நன்றி கூறினார்.