Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சிறப்பு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம்.

0

'- Advertisement -

 

பாரதிதாசன் பல்கலைகழகத்தில் சிறப்பு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம்  மற்றும் திருச்சி மாவட்ட பொது சுகாதார பணித்துறையுடன்  இணைந்து கோவிட்-19 சிறப்பு கொரோனா மூன்றாம் தவணை (பூஸ்டர்) தடுப்பூசி முகாம் இன்று பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைப்படியும் இந்த முகாமினை பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் கணேசன் தலைமையேற்று துவக்கிவைத்தார்.

திருச்சி நவல்பட்டு வட்டார  மருத்துவ அலுவலர் மருத்துவர் பாலாஜி மேற்பார்வையில்,  மாவட்ட பொது சுகாதாரபணித்துறை இணை இயக்குனர் மருத்துவர் சுப்ரமணி வழிகாட்டுதலின்படி, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் பேராசிரியர் சீனிவாச ராகவன், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல், தஞ்சை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் பேராசிரியர் முருகானந்தம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள காவேரி மருத்துவமனையின் மருத்துவர்கள்  இளம்பரிதி மற்றும் விஜய் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் இந்த சிறப்பு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாமுக்கு முன்னிலை வகித்தனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழக முன் களப்பணியாளர்கள் ஆகிய பேராசிரியர்கள், பாதுகாவலர்கள், துப்புரவு தொழிலாளர்கள், டிரைவர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி  ஆனது சமூக இடைவெளியை கடைப்பிடித்து  செவிலியர்கள் ரேணுகா, சசிகலா மற்றும் ஜூலி ஆகியோர் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்கள  பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தினார்கள்.

இந்த முகாமினை பாரதிதாசன் பல்கலைக்கழகதின் யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல் ஏற்பாடு செய்து சிறப்புற ஒருங்கிணைத்தார்.
இந்த நிகழ்வின் தொடக்கமாக பாரதிதாசன் பல்கலைக்கழக முன் களப்பணியாளர்களான பாதுகாவலர்கள் ஓட்டுநர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு திருச்சி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் தலைவர் இன்ஜினியர் ராஜசேகர் மூலம் வழங்கப்பட்ட முக கவசங்களை பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் கணேசன் மற்றும் தேர்வு நெறியாளர் பேராசிரியர் சீனிவாசன் ராகவன் அவர்கள் வழங்கினார்கள்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.