Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் தென்னக ரயில்வே சார்பில் ஒற்றுமைக்கான ஓட்டம் நடைபெற்றது.

0

'- Advertisement -

 

Ad banner

 

மத்திய இரயில்வேயின் ஆசாதிகா அம்ரித் மஹோத்சவின் திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி தென்னக இரயில்வே சார்பில் “ஒற்றுமைக்கான ஓட்டம்” நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 1942 ஆம் ஆண்டு பர்மா போரின் போது INA க்கு ஆதரவளித்த சுதந்திரப் போராட்ட வீரர் ஸ்ரீ.எஸ்.பி.
நாராயணசாமியின் மனைவி யசோதை அம்மாள் (வயது 87) அவர் இந்த மகிமையான நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அமைந்துள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ஒற்றுமை ஓட்டம் துவங்கியது.

இந்த ஓட்டமானது ரயில்வே ஜங்ஷனில் துவங்கி , ரயில்வே பாலம், கல்லுக்குழி ரயில்வே ஸ்டேடியம், ஹெல்த் யூனிட், ஆஞ்சநேயர் கோயில், செங்குளம் காலனி, ரயில்வே ஸ்டேடியம், மன்னார்புரம் மெயின் ரோடு வழியாக 05 கிமீ
தூரம் சென்று மீண்டும் ரயில்வே கோட்ட செயலாளர் அலுவலகம் வந்து சேர்ந்தது.

இதில் ரயில்வே ஊழியர்கள்,பணியாளர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 55 பேர் ஒற்றுமை ஓட்டத்தில் பங்கேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.