
திருச்சி பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
போதையில் தள்ளாடும் திருச்சி மாநகரம்….
திருச்சி மாநகரம் முழுவதும் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பலமுறை காவல்துறையினரிடம் மனு அளித்தும் கண்டுகொள்ளாத காவல்துறை .
இளைஞர்களும் அப்பாவி பொதுமக்களும் போதையில் தள்ளாடும் போது காவல்துறை வேடிக்கை பார்ப்பதின் மர்மம் என்ன?
திருச்சியின் மையப் பகுதிகளில் பல இடங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் விடிய விடிய சட்டவிரோதமாக மது விற்பனையும் நடந்து வருகிறது. கண்டு கொள்வாரா காவல்துறை ஆணையர் ?
திருச்சியின் மையபகுதியில் உள்ள ஓர் கல்லூரியில் இருந்துதான் தென் தமிழகத்திற்கு கஞ்சா,போதை மாத்திரை போன்று பல போதைப்பொருட்கள் ஆன்லைன் மூலமாகவும், கல்லூரியிலும் சப்ளை நடைபெற்று கொண்டிருக்கிறது.
இவை அனைத்தையும் தெரிந்து கொண்டே காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதின் மர்மம் என்ன?
பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

