
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள அருள்மிகு ஒண்டிக்கருப்பண்ண சாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள அருள்மிகு ஒண்டிக்கருப்பண்ண சாமி கோயிலில் ஒண்டிக்கருப்பண்ண சாமி, ராஜகாளியம்மன், பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி உள்ளிட்ட சாமி சன்னதிகள் உள்ளன.
இந்த கோயில் கும்பாபிஷேகத்தை யொட்டி ஜுன் 1-ம் தேதி காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது.
தொடர்ந்து அன்று மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து
இன்று 4-வது கால யாகசாலை பூஜை முடிந்ததும் கடம் புறப்பாடு நடைபெற்றது.
பின்னர் காலை 10 மணி அளவில் அனைத்து சன்னதிகளின் விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மதியம் பொதுமக்களுக்கு
பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் .

