Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு,மேயர் அன்பழகன் ஆகியோரை எதிர்த்து கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்.

0

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க நிறுவனத் தலைவரும் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான இனிகோ இருதயராஜ் நேற்று இரவு தனது அலுவலகம் முன் சேரில் அமர்ந்து போராட்டம் ?

திருச்சி மாநகர முழுவதும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால் சாலைகள் மேடும் பள்ளமுமாக உள்ளது.இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக சத்திரம் பேருந்து நிலையம் முதல் காந்தி மார்க்கெட் வரை உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் புழுதி காற்று பரவுவதால் பலரும் சிறு சிறு விபத்துகளில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.இதுகுறித்து கடந்த மாதம் திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாநகராட்சி முற்றுகையிட்டு மேயர் அன்பழகனிடம் மனு அளிக்கப்பட்டது.
அப்போது இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மேயர் உறுதி அளித்தார்.

மேலும் நேற்று நடைபெற்ற மாநகராட்சி சாதாரண கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலரும் சாலைகளை உடனடியாக செப்பனிட்டு தருமாறு கேட்டுக் கொண்டனர். இதற்கு மேயர் அன்பழகன் ஒப்பந்ததாரர் எல்&டி நிறுவனத்திரிடம் உடனடியாக பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

முன்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே என். நேருவிடம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்புகளில் திருச்சியில் உள்ள சாலைகள் எப்போது சரி செய்யப்படும் என கேட்கும் போது விரைவில் இதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும், அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன் என கூறி உள்ளார்,

உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு,மாநகராட்சி மேயர் அன்பழகன் இருவரும் உறுதிஅளித்த போதும், உறுதியளித்ததை சற்றும் கண்டுகொள்ளாத கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தனது அலுவலகம் முன்பு இரவு 10 மணிக்கு மேல் சாலையில் சேர்கள் போட்டு அமர்ந்து மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து இப்போதே பணிகளை தொடங்க வேண்டும் என கட்டளையிட்டு உள்ளார்.
மாநகராட்சி அதிகாரிகள் நாளை காலை கண்டிப்பாக பணிகளை தொடங்கி விடுவோம் என உறுதி அளித்த பின்பு அந்த இடத்தில் இருந்து சென்றுள்ளார்.

கடந்த ஆறு மாதமாக சாலைகள் படு மோசமாக அதுவும் எம்எல்ஏ அலுவலகம் முன்பு உள்ள சாலைகள் மிகவும். மோசமாக உள்ளது இப்போதுதான் இனிகோ இருதயராஜுக்கு தெரிந்ததா ? பகலில் எல்லாம் மாநகராட்சி அதிகாரிகள் வரமாட்டார்களா ? இரவு நேரத்தில் சாலையில் சேர் போட்டு அமர்ந்து அதிகாரிகளை வரவழைத்த காரணம் என்ன?

மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேருவின் விசுவாசி.இவர் நேற்று மாநகராட்சி கூட்டத்தில் சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என கூறியதை கண்டு இரவில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்.

பொதுமக்களுக்காக பாடுபடுபவர் ஆறு மாதமாக எங்கு சென்று இருந்தார்,இதுவரை இந்த சாலையில் இவர் சொன்றதே இல்லையா? தான்  வெளி உலகத்துக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக எப்படி எல்லாம் இவர் நடிக்கிறார் என இவரது போராட்டத்தை (?). கண்ட பொதுமக்கள் மக்களாக நக்கலாக பேசி சிரித்தபடி சென்றனர் .

Leave A Reply

Your email address will not be published.