திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் நேற்று மாலையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது:-
ஜி.எஸ்.டி.யில் எவ்வளவு நிதி தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கே தெரியவில்லை. பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது, எங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை தாருங்கள் என்று கேட்டார். அதற்கு பிரதமர் ஜி.எஸ்.டி. நிலுவை தொகை ரூ.9 ஆயிரத்து 602 கோடியை நாங்கள் கொடுத்து விட்டோம் என்று மேடையில் கூறிவிட்டார்.
இந்தி படித்தால் சூத்திரர்களாகி விடுவோம் என அதிமுகவை சேர்ந்த வி கே எஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார் இது மிகவும் கீழ்த்தரமானது சிந்தனையை காட்டுகிறது.திமுக ஜாதியை வைத்து பிழைப்பு நடத்தும் கட்சி.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்தான் மருத்துவ சீட் 66 ஆயிரம் சீட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை-எளிய மாணவர்கள் மருத்துவர்களாக உருவாக வேண்டும் என்பதே நமது இலக்கு. பா.ஜ.க. புதிய கல்வி கொள்கை மூலம் இந்தியை கண்டிப்பாக திணிக்காது. அமைச்சர் பொன்முடி விருப்பம் உள்ளவர்கள் இந்தியை தேர்வு செய்து படிக்கலாம் என்று கூறி வருகிறார். புதிய கல்விக் கொள்கையில் என்ன உள்ளதோ அதை அப்படியே கையில் எடுத்துக் கொண்டு தான் தமிழகத்தின் கல்வி கொள்கை என்று கூறி வருகின்றனர்.
இங்கு உள்ள அமைச்சர்கள் அனைவருமே தமிழகத்தை தாண்டி எங்குமே செல்ல மாட்டார்கள்.கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கல்வி வளர்ச்சி பற்றி சிந்திக்காமல் உதயாநிதி படங்களுக்கு மட்டுமே ஆதரவாக பேசி வருகிறார்.
ஆதினம் மீது பாயவும் தெரியும் என தமிழக அறநிலையத்துறை சேகர் பாபு பேசியதற்க்கு ஆதீனங்கள் மீது கை வைத்தால் விபரீதமாக வேறு மாதிரி இருக்கும் என்றார்.
கச்சத்தீவை பா.ஜ.க. தான் மீட்கும் 18 கோடி தொண்டர்கள் பா.ஜ.க.வில் உள்ளனர். உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக கட்சி பா.ஜ.க.தான். நீங்கள் (தி.மு.க.) செய்யும் ஒவ்வொரு ஊழல்களையும் மக்கள் மன்றத்தில் நாங்கள் தொடர்ந்து வைக்கப்போகிறோம். 2024-ம் ஆண்டு கண்டிப்பாக பா.ஜ.க.வின் எம்.பி. தான் திருச்சியில் இருப்பார். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் இல.கண்ணன் கௌவுதம்,, பார்த்திபன், லீமா சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டதால் திருச்சியே திணறியது..
கடந்த வாரம் இதே இடத்தில் மூன்று அமைச்சர்கள் கலந்துகொண்ட திமுகவின் ஓராண்டு சாதனை கூட்டத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்களே கூடினர்.நேற்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பல ஆயிரம் தொண்டர்கள் கூடியதை கண்டு திமுகவினர் கலக்கம் அடைந்து உள்ளனர்..