Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தமிழர் தேசம் கட்சி எதிர்காலத்தில் பல எம்பி, எம்எல்ஏகளை உருவாக்கும். நிறுவனத் தலைவர் செல்வகுமார் பேட்டி.

0

 

எதிர்காலத்தில் பல எம்பி எம்எல்ஏக்களை உருவாக்கம் தமிழர் தேசம் கட்சியின்
நிறுவனத் தலைவர் கே.கே. செல்வகுமார் பேட்டி..

வீர முத்தரையர் முன்னேற்ற சங்க நிறுவனத் தலைவர் கே.கே. செல்வகுமார் தமிழர் தேசம் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை இன்று அறிமுகம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது;-
ஒதுக்கப்பட்ட சமூகத்துக்கு ஆனது.

தமிழர் தேசம் கட்சி அரசியலில் ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கான கட்சி.
அவர்களை வீதியில் இறங்கி உரிமைகளுக்காக போராட அனைத்து வகையிலும் தமிழர் தேசம் கட்சி தயார் படுத்தும்.
இன்றைக்கு திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளில் ஒட்டர், போயர், அருந்ததியர், வண்ணார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிளைச் செயலாளர் பொறுப்பில் கூட இல்லாமல் இருக்கின்றார்கள்.
1000 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட சமூகமான முத்தரையர் சமூகத்தின் மக்கள் தொகை அடிப்படையில் 40 எம்.எல்.ஏ. சீட்டுகளை பிரதான திராவிட அரசியல் கட்சிகள் ஒதுக்க வேண்டும். ஆனால் ஐந்து அல்லது ஏழு சீட்டுகள் மட்டுமே ஒதுக்குகிறார்கள்.
அதில் நான்கு பேர் ஜெயிக்கிறார்கள்.
இந்த இயக்கம் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரான இயக்கம் கிடையாது. கடந்த சட்டமன்ற தேர்தலில் திருமயம் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு 15 ஆயிரம் வாக்குகள் பெற்றிருக்கின்றோம். இதற்காக ஒரு பைசாவும் வாக்குக்காக செலவழிக்கவில்லை. பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்தால் ஐந்து தொகுதிகளில் தனித்து தமிழர் தேசம் கட்சி களம் இறங்கும். அரசியலில் ஜெயிக்க பணம் தேவையில்லை. வியாபாரம் செய்ய அரசியலுக்கு வரவில்லை.
இந்த புதிய இயக்கம் எதிர்காலத்தில் நிச்சயமாக எம்பி எம்எல்ஏக்கள் ஐ நிச்சயம் உருவாக்கும்.
தற்போதைய நிலையில் கட்சியின் நிறுவனத் தலைவராக தானும், பொதுச் செயலாளராக தளவாய் ராஜேஷும், பொருளாளராக கணேசன் என்பவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த கட்சியில் அரசியலில் ஒடுக்கப்பட்ட சமூகம் சார்ந்தவர்கள் தங்களின் ஜாதிய அடையாளங்களுடன் இயக்கத்தில் பயணிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மாலையில் மத்தியபேருந்து நிலையம் அருகிலுள்ள சீனிவாசா மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் கொடி அறிமுக விழா நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.