10 ஏக்கர் நிலத்தை ஆட்டைய போட முயற்சிக்கும் இஸ்லாமிய அமைப்பிற்கு ஆதரவு அளிக்க திருச்சி வந்தாரா? அமைச்சர் செஞ்சி மஸ்தான். உரிமையாளர் கண்ணீர்.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடியில் பெரியண்ணன் முத்தரையர் என்பவரின் 10 ஏக்கர் நிலம் நிலம் உள்ளது.
இந்த இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு என்ற பெயரில் பெரியண்ணன் முத்தரையருக்கு சொந்தமான இடத்தை வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடம் என கூறி சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பெரியண்ணன் முத்தரையரின் பேரன் தனபால் கூறியபோது:
எங்கள் பாட்டனார் பெரியண்ணன் கடந்த 1961இல் திருவெறும்பூர் கும்பக்குடி வேலாயுதம்குடி கிராமத்தில் அன்சாரி பாஷா என்பவரிடம் இருந்து 13 ஏக்கர் நிலம் கிரயம் பெற்றுள்ளார். மூன்று ஏக்கர் நிலத்தை ஏற்கனவே விற்று விட்டார் இப்போது 10 ஏக்கர் நிலம் எங்களது பெயரில் உள்ளது.
தாத்தா மறைவுக்குப் பின்னர் எனது தந்தை ராமலிங்கம் மற்றும் சித்தப்பா ராசு ஆகிய இருவரும் மேற்கண்ட இடத்தில் விவசாயம் செய்து வந்தனர்.
1998-ஆம் ஆண்டு எனது தந்தை ராமலிங்கமும் இறந்துவிட்டார் இதன்பின்னர் எனது சித்தப்பா ராசு பெயரிலும் எனது பெயரிலும் என் சகோதரர் பழனிவேல் பெயரிலும் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டது .
இந்த நிலையில் நாங்கள் திருவிழாவிற்காக வெளியூர் சென்ற நேரத்தில்
இஸ்லாமிய நல்வாழ்வு கழகத்தினர் எங்கள் நிலத்தில் அத்துமீறி நுழைந்து வேலிக்காக ஊன்றப்பட்ட கற்களை பிடுங்கி எறிந்து அங்கிருந்த எங்கள் பாட்டனாரின் சமாதியை சேதப்படுத்தியுள்ளனர். அந்த இடத்தில் .அவர்களின் பெயர் பதித்த ஸ்லாப் உன்றி சென்று உள்ளனர் .
இவர் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென சிறுபான்மை துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இந்த இடத்திற்கு வந்து எங்களுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை இது வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடம் என கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த நிலம் இஸ்லாமிய நல்வாழ்வு கழகத்தினரால் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்க பட்டு வரும் நிலையில் இதுகுறித்து சில மாதங்களுக்கு முன்பு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர், காவல்துறை எஸ்.பி, மற்றும் ஐ.ஜி., ஆகியோரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது இது குறித்துக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாசில்தார் விசாரணை போது எங்களுக்கு சொந்தமான பத்திரம் பட்டா சிட்டா அனைத்து ஆவணங்களையும் எடுத்துச் சென்றோம் ஆனால் இஸ்லாமிய நல்வாழ்வு கழகத்தினரிடம் எந்த ஆவணங்களும் இல்லை. இதனால் காவல்துறையினர் முறைப்படி நில அளவையர் அளந்து தரும் வரை இந்த இடத்தில் யாரும் நுழையக்கூடாது என கூறி உள்ள நிலையில் அமைச்சர் தனிப்பட்ட முறையில் ( எந்த அரசு அதிகாரிகள் மற்றும் வக்பு வாரிய அதிகாரிகள் நிர்வாகிகள் யாரும் உடன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது) இது வக்பு வாரியத்திற்கு சொந்தமான கூறியிருப்பது கண்டனத்துக்குரியதாகும்.
வருவாய் துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் இதுபோன்ற பிரச்சினை பல்வேறு இடங்களில் தொடர் கதையாக உள்ளதாகவும் பிரச்சனைகளை தீர்த்து வைக்க மாவட்ட அளவில் தனி ஆணையம் அமைத்து உரிய நபர்களிடம் ஆவணங்களின் அடிப்படையில் துறை சார்ந்த அதிகாரிகளின் முன்னிலையில் விசாரணை நடத்தி தீர்வு காணப்பட வேண்டும்.
எங்களுக்கு சொந்தமான நிலத்தினை அதிகாரிகள் முறையாக ஆவணங்களின் அடிப்படையில் அளந்து, அத்து காண்பித்து சப் டிவிஷன் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் தற்போது எனது குடும்பத்தினர் அனைவரும் சாதாரண விவசாய கூலி வேலை செய்து வருவதால் எங்கள் குடும்பத்தினரை மிரட்டி இந்த இடத்தை ஆக்கிரமித்து விடலாம் என நினைக்கிறார்கள் என தனபால் கூறினார்.
நேற்று இவருக்கு சொந்தமான இடத்தில் பாட்டனார் சமாதிக்கு தனது குடும்பத்தினருடன் சென்று சூடம் ஏற்றி வழிபட்டனர். இவர்களுடன் வழக்கறிஞர் பொன். முருகனும் உடன் சென்றார்.