கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கார்த்திக் சித்த வைத்திய சாலாயில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி
கார்த்திக் வைத்தியசாலாவில்
நலத்திட்ட உதவிகளை
டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் வழங்கினார்.
மறைந்த தி.மு.க. தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பிறந்தநாள் வருகிற 3ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் 7-வது கிராசில் அமைந்துள்ள கார்த்திக் வைத்தியசாலையில் இலவச சித்த மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் டாக்டர் எஸ். தமிழரசி சுப்பையா, டாக்டர் கார்த்திக் முன்னிலை வகித்தனர்.
இதில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் கலந்துகொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக சித்த மருந்துகள் வழங்கினார்.
மேலும் ஏழை எளிய பெண்களுக்கு சேலை, உணவு பொட்டலங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் அளித்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் மருதுபாண்டி, கே.ஆர்.கே. ராஜா, சிந்தாமணி கார்த்தி,
சதீஷ் குமார்,
சிங்கம் விஜய்,
மகளிர் அணி தி.மு.க.
நிர்வாகிகள் மகாலட்சுமி மார்த்தாண்டம், சசிகலா,கலை ,
தாமரை லட்சுமி, வாலாம்பாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.