திருச்சியில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்ப்பட்டது.
திருச்சியில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர்
சங்கம் மற்றும் அனைத்ந்திய
சித்த மருத்துவர்கள் சங்கம்
சார்பில் நலத்திட்ட உதவிகள்
வழங்கும் விழா நடைபெற்றது.
திருச்சி மத்திய பேருந்து
நிலையம் அருகே உள்ள
அருண் ஓட்டலில் நடைபெற்ற
இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு
பத்திரிகையாளர் சங்கத்தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ்
தலைமை வகித்தார்.
மண்டல
தலைவர் ரமேஷ், மாவட்ட
தலைவர் பாலாஜி ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
அகில இந்திய பிரஸ்
கவுன்சில் தேசிய குழு
உறுப்பினராக தேர்வு
செய்யப்பட்ட டாக்டர் சுப்பையா
பாண்டியன், மயிலாடுதுறை
எழில், நாகை சையது
பக்ருதீன் ஆகியோர்
கவுரவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கான சான்றிதள்
மற்றும் அடையாள
அட்டைகளை தமிழ்நாடு
பத்திரிகையாளர் சங்க
மாநிலத் தலைவரும், அகில
இந்திய பொதுச்
செயலாளருமான டி.எஸ்.ஆர்
சுபாஷ் வழங்கினார்.
இந்த
விழாவில் 50 பெண்களுக்கு
இலவச புடவை, மதிய உணவு,
சித்த மருந்துகள், மாத்திரைகள்,
கபசுர குடிநீர் உள்ளிட்டவை
வழங்கப்பட்டது.
சிறப்பு
விருந்தினராக ஜவகர் ஆறுமுகம் கலந்து கொண்டு
நலத்திட்ட உதவிகளை
வழங்கினார்.
விழாவில் திருச்சி ஜோசப்
கண் மருத்துவமனை
சிற்றாலய ஆயர் டேவிட்
பரமானந்தம், சமூக ஆர்வலர்
ஜான் ராஜ்குமார்,
மருத்துவர்கள் விஜய்
கார்த்திக், குமார், கணேசன்,
காளியம்மாள், சகுந்தலா,
சந்தானகிருஷ்ணன், பிரபு
பாண்டி, மனோஜ், ஜெனட்,சரவணன் உள்ளிட்ட
ஏராளமானோர் கலந்து
கொண்டனர்.
இறுதியில் அகில இந்திய
பிரஸ் கவுன்சில் தேசிய குழு
உறுப்பினரும், அனைத்ந்திய
சித்த மருத்துவ சங்க
தலைவருமான டாக்டர்
சுப்பையா பாண்டியன்
ஏற்புரை வழங்கி நன்றி
கூறினார்.