திருச்சி கருமண்டபம் பி.ஆர். பாலசுப்ரமணியன் வார்டில் புதிய ரேஷன் கடை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.
திருச்சி கருமண்டபம்
ஆர். எம்.எஸ். காலனியில் புதிய ரேஷன் கடை
அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்
திருச்சி கருமண்டபம்
ஆர்.எம்.எஸ். காலனி பகுதியில்
கூட்டுறவு துறை சார்பில் இன்று ரேஷன் கடை நடைபெற்றது.
இந்த திறப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமை தாங்கினார். அப்பகுதி மாநகராட்சி கவுன்சிலர் பி.ஆர்.பி. மஞ்சுளாதேவி, வட்ட செயலாளர் பி.ஆர். பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகர மேயர் அன்பழகன், காடுவெட்டி தியாகராஜன் எம்எல்ஏ ,
மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வைரமணி,
மாநகராட்சி ஆணையாளர் மண்டலக் குழு தலைவர்கள் துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், பகுதி செயலாளர்கள் கண்ணன், மோகன்தாஸ் , வர்த்தக அணி மணிமாறன் மூக்கன், கவுன்சிலர் ராம்தாஸ் , மகளிரணி சுகுணா, பந்தல் ராமு, தொ.மு.ச. குணசேகரன், ஆர்.எம்.எஸ்.காலனி குடியிருப்போர் நலச்சங்க தலைவர் சிவசங்கரன், செயலாளர் அந்தோணி பால்ராஜ், பொருளாளர் லியாகத் அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கூறும்போது, இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் நாலா புறமும் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி வந்தார்கள். இங்கு ஒரு ரேஷன் கடை அமைக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தோம். தற்போது புதிய கவுன்சிலர் துரித நடவடிக்கை எடுத்ததால் ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சருக்கும்,
மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.