நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
ஐ.பி.எல் தொடரில் 18 புள்ளிகளுடன் குஜராத் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
16 புள்ளிகளுடன் லக்னோ 2வது இடத்திலும்,
தலா 14 புள்ளிகளுடன் ராஜஸ்தான், பெங்களூரு ஆகிய அணிகள் 3 மற்றும் 4ஆவது இடத்திலும் உள்ளன.
டெல்லி, பஞ்சாப் ஆகிய அணிகளும் தலா 12 புள்ளிகளுடன், ரன் ரேட் அடிப்படையில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணி தலா 10 புள்ளிகளுடன் முறையே 7 மற்றும் 8 வது இடத்திலும் உள்ளன.
சென்னை அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 9வது இடத்திலும், 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள மும்பை அணி 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளன.
தற்போதைய நிலவரப்படி, குஜராத் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், மும்பை, சென்னை அணிகள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டன.
லன்கோ அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றுவிட்டால், பிளேஆப் வாய்ப்பை உறுதிசெய்துவிடும்.
இதனால் மீதமுள்ள ஆறு அணிகளும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழல் உள்ளதால், இனி வரும் போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.