உலக பூமி தினத்தை முன்னிட்டு தண்ணீர் அமைப்பு சார்பில்
செந்தண்ணிர்புறம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
நெகிழியைத் தவிர்ப்போம் புவியைக் காப்போம், புவி வெப்பமாதலைக் குறைக்க தண்ணீர் சிக்கனம், மின்சார சிக்கனம், எரிபொருள் சிக்கனம் கடைபிடிப்போம், மரக்கன்றுகளை நட்டு பாதுகாப்பாய் வளர்ப்போம், மண்வளம் காப்போம், மரங்களே மண் அரிப்பைத் தடுக்கும்.
மகத்தான ஆயுதம், கனிம வளங்களை காப்போம் , காற்று மாசு தடுப்போம், வருங்கால தலைமுறைக்கு மரங்களே சொத்தாகும் போன்ற விழிப்புணர்வு வாசம் அடங்கிய பாதகை செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆசிரியை அருணா, தண்ணீர் அமைப்பின் செயல்தலைவர் கே.சி.நீலமேகம், மாணவர்கள் , மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்ட
விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.