திருச்சியில் கவிதை நூல் வெளியீட்டு விழா.
கவிஞர் தனலெட்சுமி பாஸ்கரன் எழுதிய “பெருவெளி கடக்கும் சிறுதுளி” பெஞ்வெளி கடக்கும். ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா
தில்லைநகர்
ரெங்கா ஹாலில் நடைபெற்றது.
முனைவர். ச.அய்யம்பிள்ளை (பேராசிரியர் ஓய்வு, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,) தலைமையில்
ஜமுனா சிவாஜிராவ் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்.
வந்தவர்களை கவிஞர்.எஸ்.டி.ஜி.
இளஞ்சேட் சென்னி வரவேற்புரையற்ற,
தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி – பேராசியரும் ,
மக்கள் சக்தி இயக்க பொதுச் செயலாளருமான
முனைவர். லெ.பாஸ்கரன்
நூல் வெளியீட்டுச் சிறப்புரையாற்றினார் .
முதல் பிரதியினை கேத்தரீன் ஆரோக்கியசாமி , பெற்றுக் கொண்டார்.
ஜென்னீஸ் அகாடமி-(ஓய்வு) இயக்குன்ர் மு.
பொன்னிளங்கோ
பேராசிரியை முனைவர். முருகேஸ்வரி பாரதிதாசன் பல்கலைக் கழகம்,
திருச்சி கவிஞர். வீ.கோவிந்தசாமி தலைவர், வாசகர் வட்டம், மாவட்ட மைய நூலகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் .
விழாவில் மக்கள் சக்தி இயக்கம் , மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பில் வந்தவர்கள் அனைவரும் “பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பை எடுப்போம் ” என்றும் துணிப்பையும், ‘வீட்டுக்கு சிறு தோட்டம்”என்ற வாசகத்துடனும் விதைப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்ன. கவிஞர். தனலெட்சுமி பாஸ்கரன் அவர்களின் ஏற்புரை நன்றியுரையோடு விழா இனிதாய் நிறைவுற்றது.
நிகழ்ச்சித் தொகுப்பு தந்த முனைவர். கி.சதீஷ்குமரன் அவர்களுடன் (தண்ணீர் அமைப்பு)
விழாவிற்கு மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், திருச்சி நகைச்சுவை மன்ற செயலாளர் கோ. சிவகுருநாதன் , நம் உரத்த சிந்தனை சேதுமாதவன், பாலா பாரதி, அப்துல், நந்தவனம் சந்திரசேகர், மற்றும் பலரும் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.