திருச்சி ரெயிலில் கழிவறையில் மதுபாட்டில்கள் ரெயில்வே போலீசார் சோதனையில் சிக்கியது.
காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு நேற்று இரவு வந்த ரெயிலில் திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சப்- இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரெயில் பெட்டியில் கழிவறைக்குள் ஒரு மர்மபை இருந்ததை கண்டனர்.

அதை சோதித்து பார்த்தபோது, விதவிதமான மதுபாட்டில்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அதை கைப்பற்றிய போலீசார் இதை கொண்டு வந்தது யார்? எங்கு கொண்டு செல்லப்படுகிறது? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி வழியாக செல்லும் ரெயில்களில் அடிக்கடி மது கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.