
கித்தார் டி.வின்சன்ட் மறைவுக்கு ஜேகேசி அறக்கட்டளை தலைவர் ஜான் ராஜ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
இசைக்கலைஞர் கித்தார் டி.வின்சென்ட் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அவருடைய குமாரர் தியோடர் காலேப் கலைஞர் தொலைக்காட்சி திருச்சி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
அவருக்கும், அவருடைய தாயார், அவருடைய சகோதரர், உறவினர்கள், நண்பர்கள், சகோதரி ஜெயராணி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை மற்றும் ஐசிஎப் பேராயம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
திருச்சியில் 40 ஆண்டுகள் இசைத்துறையில் சிறந்து விளங்கியவர். சிறந்த இசைக் கலைஞர். சிறந்த இசை அமைப்பாளர். திருச்சி இசைக்குழுவினுடைய இயக்குனராக இயங்கி வந்தவர்.
அவருடைய பிரிவால் துயருறும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக திருச்சி ஒரு மிகப் பெரிய இசைக் கலைஞரை இழந்துவிட்டது என்று சொல்லலாம். அப்படிப்பட்டவர் கித்தார் டி.வின்சென்ட். திருச்சியில் அவருக்கு இணையாக யாருமே கிடையாது.
அப்படி ஒரு நல்ல ஒரு நண்பர். எனக்கு கிட்டத்தட்ட ஒரு 30 ஆண்டுகால நண்பர். அவருடைய மரணச் செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அதே நேரம் அவரது ஆத்மா இளைப்பாறுதல் அடைய எல்லாம் வல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மறைந்த டி.வின்சென்ட் உடல் இறுதி அஞ்சலிக்காக திருச்சி கேகே நகர் அருகே உள்ள சந்தியாகு நகர் 2வது குறுக்கு தெருவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.நாளை காலை 8 மணி அளவில் மேலப்புதூர் RCMC கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும்.

