பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் சார்பில் தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் ரத்த தான முகாம்.
தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது .
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வத்தின் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றிவேலின் ஆலோசனைப் படியும் தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் பேராசிரியர் சீனிவாசராகவன் தலைமையேற்று துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல் தஞ்சை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளர் பேராசிரியர் முருகானந்தம், பான் செக்கர்ஸ் கல்லூரியின் முதல்வர் கேட்டலின். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் தஞ்சை மாவட்ட தலைவர் முனைவர். ராஜமாணிக்கம், தஞ்சை மருத்துவக் கல்லூரியின் ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் செந்தில் குமார், பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் வித்யா மற்றும் பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்த மாபெரும் இரத்ததான முகாமில் பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியின் 150 மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் இரத்ததானம் செய்தனர்.