திருச்சியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஓன்றியத்தில் உள்ள போச்சம்பட்டி கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் உலக மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது .
இந்நிகழ்வில் சிறப்பாக சமூகத்தில் கள பணிகளை செய்து வரும் பெண்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பள்ளி ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் சுகன்யா கணிமொழி,
சரண்யா,
தையல் பயிற்சி அளித்து வரும் மோகனா, அங்கன்வாடி பணியாளர் நிர்மலா, மகளிர் சுய உதவி குழு தலைவி சுந்தரவள்ளி மற்றும் தாமரை ஆகியோருக்கு வழக்கறிஞர் கார்த்திகா, சுகாதார பணியாளர் அல்லிகொடி ஆகியோர் பாராட்டு தெரிவித்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தனர்.
இந்நிகழ்விற்கு மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் அனைத்து இந்திய மக்கள் உரிமை மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஆர். ஏ. தாமஸ் தலைமை தாங்கினார்.
நிகழ்வில் கலந்து கொண்ட பெண்கள் அவர்கள் வாழ்க்கையில் சாதிப்பதற்க்கு முன்பு அவர்கள் கடந்து வந்த போராட்டங்களை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பெண்கள் சாதனைகள் புரிய இன்றும் பல தடைகளை தகர்த்தெறிந்து தான் வர வேண்டியுள்ளது மேலும் தன்னம்பிக்கை விடாமுயற்சி கடின உழைப்பு ஆகியவை இருந்தால் பல சாதனைகளை புரிய முடியும் என்பதை தெரிவித்தனர்.
நிகழ்வின் முடிவில் அனைவருக்க்கும் மாதுளை ,கொய்யா, நெல்லி உள்ளிட்ட பழ வகையிலான மரகன்றுகள் வழங்கப்பட்டு அப்பகுதியில் நடப்பட்டது.