திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உலக தாய்மொழி தினம்.ஜான் ராஜ்குமார்,டாக்டர் சுப்பையா பாண்டியன் விழா பேருரை.
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உலக தாய்மொழி தினம் கல்லூரி முதல்வர் முனைவர் இஸ்மாயில் முகைதீன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் ஜமால் முஹம்மது பிலால், செயலாளர் மற்றும் தாளாளர் முனைவர் காஜா நஜிமுதீன், பொருளாளர் ஜமால் முஹம்மது, உதவி செயலாளர் அப்துல் சமது, உறுப்பினர் நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் கௌரவ இயக்குனர் அப்துல் காதர் நிஹால், துணை முதல்வர் முகமது இப்ராகிம், கூடுதல் துணை முதல்வர் முகம்மது சிஹாபுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மேலும் ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவன தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் சிறப்புரையாற்ற,
தலைவர், அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் மற்றும் உலக தமிழ் திருக்குறள் பேரவை டாக்டர். கே.எஸ்.சுப்பையா பாண்டியன் விழாப்பேருரை ஆற்றினார்.
முன்னதாக உதவி பேராசிரியர் சிராஜூதீன் வரவேற்க, முடிவில் ரகுநாத் நன்றி கூறினார்.