திருச்சி சேர்ந்த பாண்டியன் – மலர்கொடி. இவர்களுடைய மகள் ஹாசினி இவர் திருச்சி ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் சிலம்பம், யோகா, கராத்தே, மாரத்தான் ஓட்டம் ஆகிய பயிற்சி பெற்று பல்வேறு பரிசு பெற்றவர்.
இவர் புதிய உலக சாதனை படைக்கும் முயற்சியாக கண்களை கட்டிக்கொண்டு பானை மேல் நின்று சுமார் ஒரு மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை படைத்தார்.
இவற்றை நேரில் ஆய்வு செய்து ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனரும் 200 முறை தேசிய உலக சாதனையாளர் மற்றும் கின்னஸ் உலக சாதனையாளருமான ஜெட்லீ புதிய உலக சாதனைக்கான சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் கின்னஸ் உலக சாதனையாளர்கள் சாய்னா ஜெட்லி, ஜெட்டி ஸ்சோனி, பக்கிரிசாமி, செந்தில்குமார், சஹிதா கோகுல், மற்றும் உலக சாதனையாளர்கள் சச்சின், ஹரிஷ் மற்றும் கராத்தே, சிலம்பம், யோகா மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.