மக்களின் பிரச்சினைகளை உடனே தீர்த்து வைப்பேன்.தென்ன மர சின்னத்தில் போட்டியிடும் திருச்சி 17வது வார்டு வி.சி.க வேட்பாளர் பிரபாகரன்.
திருச்சி 17 வது வார்டில் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பிரபாகரன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அக்கட்சியின் பயணிப்பவர்.
அண்ணா நகர், காமராஜர் நகர்,
கல்மந்தை, அக்ரஹாரம்,
தாராநல்லூர் பஜார் உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 17 வது வார்டில் போட்டியிடும் பிரபாகரன் இப்பகுதியிலேயே பிறந்து வளர்ந்தவர்.
இப்பகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் அனைவரையும் நன்கு அறிந்தவர் பிரபாகரன்.
கோபம் இருக்கும் இடத்தில்தான் நல்ல குணம் இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டானவர்.
நேற்று மாலை மக்களோடு மக்களாக பொதுமக்களுக்காக நான் இருப்பேன் என்பதை எடுத்துக் கூறும் வகையில் ரோட்டோர டீக்கடையில் டீ ஆற்றி பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகித்தார்.
17வது வார்டில் உள்ள அடிப்படை வசதிகளை ஒரு வருடத்துக்குள் சரி செய்து காட்டுவேன் என கூறினார் பிரபாகரன்.