திருச்சி 18வது வார்டு
திமுக வேட்பாளர் T.சண்முகப்பிரியா தீவிர வாக்கு சேகரிப்பு.
திருச்சி மாநகராட்சி 18-வது வார்டு திமுக வேட்பாளர் T.சண்முகப்பிரியா வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
திருச்சி மாநகராட்சி 18வது வார்டில் திமுக கட்சியின் சார்பில் T.சண்முகப்பிரியா களம் காண்கிறார்.
அவர் அலங்கநாதபுரம் தெருக்கள், கருவாட்டுப்பேட்டை, வீரமாநகர், பூந்தோட்டம், பீரங்கி குளத்தெரு ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு வேட்டை ஈடுபட்டார்.
வீடு வீடாக சென்று மக்களிடம் T.சண்முகப்பிரியா வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் T.சண்முகப்பிரியா பேசும்போது,
நான் வெற்றிபெற்றால் உங்களின் தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவேன் .
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கும் கே. என். நேரு ஆகியோர் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள் .18- வது வார்டில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர, அனைத்து நலத்திட்டங்களும் கிடைத்திட, முன்மாதிரி வார்டாக மாறிட திமுக சார்பில் போட்டியிடும் எனக்கு ஆதரவு தாருங்கள் என்றார்.