48 வது வார்டு மிளிர
ஆதரவு தாருங்கள்
தி.மு.க.வேட்பாளர் தர்மராஜ் வீடு, வீடாக பிரச்சாரம்.
திருச்சி மாநகராட்சி 48-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் அக்கட்சியின் பகுதி செயலாளர் இ.எம். தர்மராஜ் போட்டியிடுகிறார்.
மக்களால் அன்பு பாராட்டப்படும் தர்மராஜை பிரச்சார களத்தில் மக்கள் எளிதில் அடையாளம் கண்டு வரவேற்று மகிழ்கிறார்கள். கட்சியின் வளர்ச்சிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றி வரும் அவர் ஜெயித்தால் அர்ப்பணிப்புடன் வார்டு மக்களுக்கு சேவை செய்வார் என நம்புகிறார்கள்.
வேட்பாளர் இ.எம். தர்மராஜ் கூறும்போது,
தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் நாடு போற்றும் நல்லாட்சி நடத்தி வருகிறார்.
திருச்சி மாநகரை சென்னைக்கு இணையாக வளர்த்தெடுக்க திட்டங்கள் தீட்டப்பட்டு செயலாக்கத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில் மற்ற வார்டு மக்கள் பார்த்து மெச்சும் வகையில் 48 -வது வார்டு மிளிர உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் .
என்னை முழுமையாக அர்ப்பணித்து வார்டு மக்களுக்கு நன்றி உள்ளவனாக பணியாற்றுவேன். மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தருவேன் என உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
வார்டு மக்களுக்காக எனது குரல் மாநகராட்சியில் ஒலிக்கும் என்றார்.
பிரச்சாரத்தின் போது வட்டச் செயலாளர்கள் வரதராஜன், டோல்கேட் சுப்பிரமணி ,ஜமால் முகமது ,டி .ஏ .எஸ். சேகர், கணேசன்,தர்மராஜ், கோவிந்தராஜ் ,
அடைக்கலம் , தியாகு மற்றும் பலர் உடன் இருந்தனர்.