திருச்சி 34 வது வார்டு அதிமுக வேட்பாளர் ஜெ.சீனிவாசனை ஆதரித்து நடிகர் ஜெரால்டு மில்டன் வாக்கு சேகரிப்பு.
திருச்சி மணல்வாரித்துறைரோடு, பாரதிநகர், கீழபுதூர், காஜாப்பேட்டை, துரைசாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட
34வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் துணைமேயர் ஜெ.சீனிவாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
ஒவ்வொரு பொதுமக்களையும் சந்தித்து நோட்டீஸ்கள் கொடுத்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு இரு கரம்கூம்பி வாக்குகள் சேகரித்து வருகிறார்.
இவரை ஆதரித்து நடிகர் ஜெரால்டு மில்டன் கிழக்கு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரித்தார்.
அப்பகுதி பொதுமக்கள் அனைவரும் சீனிவாசனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.