திருச்சி மணல்வரித்துறைரோடு,பாரதி நகர் காஜா பேட்டை,கீழப்புதூர் உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 34 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் மண்டி சேகர் அப்பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
துரைசாமிபுரத்தில் ஒவ்வொரு வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து நோட்டீஸ் கொடுத்து இருகரம் கூப்பி தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள், உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறேன் எனக்கூறி ஓட்டு சேகரித்து வருகிறார்.
மண்டி சேகருடன் வட்ட செயலாளர் முகேஷ் குமார், நிர்வாகிகள் ஸ்ரீபிரகாஷ், மாதவன், பாலாமணி, பிச்சை, தன்ராஜ், செல்வேந்திரன், கருப்பு சினிவாசன், மாதேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.