திருச்சி உய்யகொண்டான் திருமலை, ரெங்கா நகர்,கீதா நகர், அம்மையப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 25வது வார்டு திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் கவுன்சிலர் நாகராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று இரவுவில் உய்யகொண்டான் திருமலை கடைவீதியில் ஒவ்வொரு பொதுமக்களையும் சந்தித்து நோட்டீஸ்கள் கொடுத்து தனக்கு ஆதரவு அளிக்குமாறு இரு கரம்கூம்பி வாக்குகள் சேகரித்தார்.
அவருடன் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் ஆதரவாக வாக்குகள் சேகரித்தனர்.