திருச்சி 26வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.வி.ஆர்.விஜயலட்சுமி ரெட்டி நலச் சங்கத்தினரிடம் ஆதரவு கேட்டார்.
குமரன் நகர், பாரதி நகர்,சீனிவாசா நகர், அம்மையப்பர் நகர், பேங்கர்ஸ் காலனி,கீதா நகர் உள்ளிட்ட இப்பகுதிகளை அடங்கிய திருச்சி 26வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் SVR விஜயலட்சுமி நேற்று மாலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இதன் ஒரு பகுதியாக கீதா நகரிலுள்ள வயலூர் ரோடு ரெட்டி நல சங்கத்தில் தனக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
ரெட்டி நல சங்கத்தினரும் தங்கள் முழு ஆதரவும் அளிப்பதாக கூறினார்.
எஸ்.வி.ஆர்.மனோகர்,ரெட்டி நலச் சங்கத்தினர்,திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.