நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2 லட்சம் சித்த மருத்துவர்கள் திமுகவுக்கு ஆதரவு.டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம்.
அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத்தின் செயற்குழு கூட்டம் தலைவர் டாக்டர் கே. எஸ்.சுப்பையா பாண்டியன் தலைமையில் திருச்சி தில்லைநகர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வெற்றி பெற பாடுபடுவது என 2 லட்சம் சித்தா ஆயுர்வேதா அக்குபஞ்சர் மருத்துவர் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து வரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பழனியில் சித்த மருத்துவ கல்லூரி, சென்னையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் துவங்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
விரைவில் சித்த மருத்துவ கல்லூரி திருச்சியில் துவங்கப்படும் என்று அறிவித்த நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் டாக்டர்கள் கணேசன், சரோஜா, ஜான் ராஜ்குமார், மகேஷ், முனவர்,முகமது அலி,சகுந்தலா, கார்த்திக்,சந்தான கிருஷ்ணன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்