Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

1000-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எளிதாக வீழ்த்தியது.

0

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டி இந்தியாவின் 1,000-வது ஒருநாள் போட்டி என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

அதன்படி பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 79 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.பின்னர் களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் சிறப்பாக ஆடி ஜேசன் ஹோல்டர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு பக்கபலமாக நின்ற பேபியன் ஆலன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்கள் விரைவில் ஆட்டமிழக்க 43.5 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்கள் சேர்த்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக சாஹல் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்.

இதனையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது.அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர்.

இஷான் கிஷன் 28 ரன்னில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து கோலி 8 ரன்னிலும் பண்ட் 11 ரன்னிலும் நடையை கட்டினர்.சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். அவர் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் தீபக் ஹூடா நிதானமாக விளையாடி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இறுதியில் 28 ஓவரில், 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டையும், அகீல் ஹுசன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஆட்ட நாயகனாக சாஹல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.