திருச்சி கேர் அகாடமியில் மருத்துவ மாணவர்களுக்கு
பாராட்டு விழா.
மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற கேர் மைய மாணவர் சிவா உட்பட 16 மருத்துவ மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்..
திருச்சி கேர் அகாடமியில் இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ள இம்மைய மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது.
இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு தேர்வாகி உள்ள கேர் அகாடமி மாணவர்களுக்கு பாராட்டு விழா திருச்சி கேர் அகாடமியில் நடைபெற்றது.

விழாவிற்கு கேர் அகாடமி இயக்குனர் பேராசிரியர் D.முத்தமிழ் செல்வன் தலைமை வகித்தார்.
ஆசிரியை கிருஷ்ணவேணி, டாக்டர்.தமிழன்பன், இயற்பியல் ஆசிரியர் சுகுமார், உயிரியியல் ஆசிரியர் டாக்டர். முத்துச்செல்வம் மற்றும் டாக்டர் இளந்தமிழன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இம்மையத்தில் பயின்ற சிவா மாநிலத்தில் முதல் ரேங்க் பெற்று சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
இம்மைய மாணவி அபிராமி தஞ்சை மாவட்டத்தில் முதலிடம் பெற்று தற்போது சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், கரூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற இம்மைய மாணவி ஆர்த்தி கோவை அரசு மருத்துவக் கல்லூரியிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டாம் பெற்ற கார்த்திக் ராஜா மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும், தீபிகா மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும், பவித்ரன் திருச்சி கீ.ஆ.பெ அரசு மருத்துவக் கல்லூரியிலும், கவியரசன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியிலும், திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மணிமேகலை திருச்சி கீ.ஆ.பெ அரசு மருத்துவக் கல்லூரியிலும், கனிகா புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியிலும், வாலன்டீனா தேனி அரசு மருத்துவக் கல்லூரியிலும், சுவாதி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியிலும், சிவனேசன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியிலும், யமுனா திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியிலும், நிஷாலினி திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர்.
மேலும் இம்மைய மாணவிகள் பல் மருத்துவ பிரிவில் நிஷா திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியிலும், ராஜேஸ்வரி மதுரை மருத்துவ கல்லூரியிலும் சேர்ந்துள்ளனர்.
மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
நிறைவாக மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவர் சிவா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.