திருச்சி மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலில் 20வது வார்டில் போட்டியிடும் ஜவகர்லால் நேரு நேற்று ஸ்ரீரங்கம் கோட்ட தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார்.
பெரியகடைவீதி, சௌராஷ்டிரா தெரு,தையல்காரர் தெரு, வளையல் கார தெரு, W.B.ரோடு உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய 20வது வார்டில்
அதிமுக முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான வெல்லமண்டி நடராஜன் வெல்லமண்டி அவர்களின் மகன் ஜவகர்லால் நேரு போட்டியிடுகிறார்.
கொரோனா முதல் அலையினால் பொது மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்த போது அப்பகுதி பொதுமக்களுக்கு பல கட்டங்களாக பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கியவர் ஜவஹர்லால் நேரு.
இவர் இப்பகுதி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டால் பொதுமக்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றுவார் என அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
இவனின் நண்பரும் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநகர் மாவட்ட செயலாளருமான சிந்தை எல். முத்துக்குமாரும் (12வது வார்டு) இணைந்து நேற்று மனு தாக்கல் செய்தார்.