திருச்சி மாநகராட்சி தேர்தல்:காங்கிரஸ் கட்சியின் சார்பில் 24 வது வார்டில் போட்டியிட சோபியா விமலா ராணி வேட்பு மனு தாக்கல்.
திருச்சி மாநகராட்சி 24வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் சோபியா விமலாராணி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருச்சி மாநகராட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்றது.
இந்த வகையில் திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கம், கோ.அபிஷேகபுரம், அரியமங்கலம், பொன்மலை கோட்ட அலுவலகங்களில் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது.
இன்று
காங்கிரஸ் கட்சியின் சார்பில் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக் ராஜகுமார் மனைவி சோபியா விமலா ராணி திருச்சி மாநகராட்சி 24வது வார்டில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருச்சி அரசு மருத்துவமனை அருகில் உள்ள கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜேஷ் கண்ணாவிடம் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலின்போது காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சந்திரன், கட்சி நிர்வாகிகள், வார்டு பொதுமக்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.