வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கிரிக்கெட் தொடர்:இந்திய வீரர்களுக்கு கொரோனா அறிகுறி.புதிய வீரர்களுக்கு வாய்ப்பு ?
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதன்படி ஒருநாள் தொடர் வரும் 6ஆம் தேதி அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16ஆம் தேதியன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் ஆமதாபாத்திலும், டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெற உள்ளன.

முன்னதாக கொரோனா பரவல் காரணமாக ஆமதாபாத்தில் நடைபெற உள்ள 3 ஒருநாள் போட்டிகளிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆமதாபாத் வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இந்திய அணி வீரர்கள் தவான் , கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்கள் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அவர்கள் அனைவரும் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளனர். அதன்பின் 2 முறை கொரோனா நெகட்டிவ் என முடிவு கிடைத்த பிறகே மீண்டும் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். இதனால் அவர்கள் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது.
இதன் காரணமாக, ஒருநாள் போட்டிகளில் புதுமுக வீரர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஷாரூக்கான், சாய் கிஷோர், ரிஷி தவான் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது.